சூழ்வேன் நினது கருணைநடம் சூழும் பெரியார் தமைச்சூழ்ந்து வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த வண்ணம் எனது மனக்குரங்கோ தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவலக் கடலில் சலியாமே வீழ்வேன் என்றால் எம்பெருமான் இதற்கென் செய்கேன் வினையேனே