சென்ற நாளில்ஓர் இறைப்பொழு தேனும் சிந்தை ஓர்வகை தெளிந்ததன் றதுபோய் நின்ற நாளினும் நிற்கின்ற திலைகாண் நெடிய பாவியேன் நிகழ்த்துவ தென்னே என்றன் ஆருயிர்க் கொருபெருந் துணையாம் எந்தை யேஎனை எழுமையும் காத்த உன்ற னால்இன்னும் உவகைகொள் கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே
சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறிய னேன்மிகத் தியங்குறு கின்றேன் மன்ற நான்இவண் இவ்வகை ஆனால் வள்ள லேநினை வழுத்துமா றெதுவோ என்ற னால்இனி ஆவதொன் றிலைஉன் எண்ணம் எப்படி அப்படி இசைக உன்ற னால்களித் துவகைகொள் கின்றேன் உனைஅ லால்எனை உடையவர் எவரே