செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின் திருவுளக் குறிப்பையுந் தெரியேன் உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன் மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன் வினையனேன் என்செய விரைகேன் பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல்அறி யேனே அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின் திருவுளக் குறிப்பையும் தெரியேன் உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன் மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன் வினையனேன் என்செய விரைகேன் பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல்அறி யேனே