செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய் ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல் எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இதுதருணங் காணே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- அருட்பிரகாச மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்