சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம் பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார் மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே