சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால் மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங் கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே