சேவற் கொடிகொள் குணக்குன்றே சிந்தா மணியே யாவர்கட்கும் காவற் பதியே தணிகைவளர் கரும்பே கனியே கற்பகமே முவாக் கிறையே வேய்ஈன்ற முத்தன் அளித்த முத்தேநல் தேவர்க் கருள்நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும்தெரியனே