பாடல் எண் :4303
சோதி அருட்பெருஞ் சோதியார் நம்முடை
ஆதி இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
பாடல் எண் :5004
சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண்க ளிக்க வே
துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிம ளிக்க வே
ஓதி உணர்தற் கரிய பெரிய உணர்வை நண்ணி யே
ஓதா தனைத்தும்உணர்கின்றேன்நின் அருளை எண்ணி யே எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5062
சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழி யே
துரிய வெளியின் நடுநின் றோங்கும் சோதி வாழி யே
சூதி லாமெய்ச் சிற்றம் பலத்துச் சோதி வெல்க வே
துலங்கப் பொன்னம் பலத்தில் ஆடும் சோதி வெல்க வே எனக்கும் உனக்கும்