சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான தேகா கதவைத் திற திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பெற்ற பேற்றினை வியத்தல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சோதிமலை ஒருதலையில் சோதிவடி வாகிச் சூழ்ந்தமற்றோர் தலைஞான சொரூபமய மாகி ஓதியவே றொருதலையில் உபயவண்ணம் ஆகி உரைத்திடும்ஐங் கருவகைக்கோர் முப்பொருளும் உதவி ஆதிநடு அந்தம்இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடிஇணையின் பெருமை வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவறியேன் அறிவேனோ விளம்பாய்என் தோழி