சோறு வேண்டினும் துகிலணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகமலாச் சுகமாம் வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கோர் மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன் சேறு வேண்டிய கயப்பணைக் கடற்சார் திகழும் ஒற்றியூர்ச் சிவபரஞ் சுடரே டீயஉம -------------------------------------------------------------------------------- திரு உலாப் பேறு தலைவி பாங்கியொடு கிளத்தல் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சோறு வேண்டினும் துகில்அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகமலால் சுகமாம் வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி மேவொ ணாதெனும் மேலவர் உரைக்கே மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன் சாறு வேண்டிய பொழில்வடல் அரசே சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே இஃது ஆம் பாடலின் உத்தர வடிவம்