பாடல் எண் :1116
ஞான மென்பதின் உறுபொருள் அறியேன்
ஞானி அல்லன்நான் ஆயினும் கடையேன்
ஆன போதிலும் எனக்குநின் அருள்ஓர்
அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால்
வான மேவிய அமரரும் அயனும்
மாலும் என்முனம் வலியிலர் அன்றே
ஊனம் நீக்கிநல் அருள்தரும் பொருளே
ஒற்றி மேவிய உலகுடை யோனே
பாடல் எண் :4518
ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து
கண்ணிகள்
பாடல் எண் :5150
ஞான நடத்தவ னே பர - ஞானிஇ டத்தவ னே
ஞான வரத்தவ னே சிவ - ஞான புரத்தவ னே
பாடல் எண் :5151
ஞான சபாபதி யே மறை - நாடு சதாகதி யே
தீன தாயாநிதி யே பர - தேவி உமாபதி யே