ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன் ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பிள்ளைச் சிறு விண்ணப்பம் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்