தடையிலா தெடுத்த அருளமு தென்கோ சர்க்கரைக் கட்டியே என்கோ அடைவுறு வயிரக் கட்டியே என்கோ அம்பலத் தாணிப்பொன் என்கோ உடைய மாணிக்கப் பெருமலை என்கோ உள்ளொளிக் குள்ளொளி என்கோ இடைதல்அற் றோங்கும் திருஅளித் திங்கே என்னைஆண் டருளிய நினையே