தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை யெண்கார் முகமாப் பொன்னென்றே னிடையிட் டறித லரிதென்றார் மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவில் லன்றென்றார் அண்கார்க் குழலா யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் தலத்தி லமர்ந்த சாமிநுங்கை யெண்கார் முகமாப் பொன்னென்றே னிடையிட் டறித லரிதென்றார் மண்கா தலிக்கு மாடென்றேன் மதிக்குங் கணைவி லன்றென்றே யெண்கா ணகைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ