தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன் திண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார் வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் வாய்ந்தொன் றெனக்குக் காட்டென்றார் அண்ணஞ் சுகமே யென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் சங்கங் கையிற்சேர்த் திடுமென்றேன் றிண்ணம் பலமேல் வருங்கையிற் சேர்த்தோ முன்னர் தெரியென்றார் வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் மடவா யுனது மொழிக்கென்றே யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ