தத்துவ மசிநிலை இதுஇது தானே சத்தியம் காண்எனத் தனித்துரைத் தெனக்கே எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே ஏற்றிநான் இறவாத இயல்அளித் தருளால் சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச் செய்வித்த பேரருட் சிவபரஞ் சுடரே சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே தனிநட ராசஎன் சற்குரு மணியே
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர் தமக்குளே சார்ந்தநற் சார்பே பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் பெறல்அரி தாகிய() பேறே புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து பொதுநடம் புரிகின்ற பொருளே () பெரிதரிதாகிய - பொ சு பதிப்பு