தனிஎன் மேல்நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லை யே தகும்ஐந் தொழிலும் வேண்டுந் தோறும் தருதல் வல்லை யே வினவும் எனக்கென் உயிரைப் பார்க்க மிகவும் நல்லை யே மிகவும் நான்செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லை யே எனக்கும் உனக்கும் தனியன் - பி இரா, ச மு க