தனியே துயரில் வருந்திமனம் சாம்பி வாழ்க்கைத் தளைப்பட்டிங் கினிஏ துறுமோ என்செய்கேன் என்றே நின்றேற் கிரங்காயோ கனியே பாகே கரும்பேஎன் கண்ணே தணிகைக் கற்பகமே துனிஏய் பிறவி தனைஅகற்றும் துணையே சோதிச் சுகக்குன்றே
தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே