தன்னிக ரில்லாத் தலைவஎன் றரற்றித் தனித்தனி மறைகள்ஆ கமங்கள் உன்னிநின் றோடி உணர்ந்துணர்ந் துணரா ஒருதனிப் பெரும்பதி உவந்தே புன்னிக ரில்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்தருட் பூரண வடிவாய் என்னுளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே