பாடல் எண் :3526
தன்னிகர் அறியாத் தலைவனே தாயே
தந்தையே தாங்குநற் றுணையே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே
என்னுடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான்
உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும்
பாடல் எண் :4580
தன்னிகர் இல்லதோர் ஸோதி - சுத்த
சன்மார்க்க சங்கம் தழுவிய ஸோதி
என்னுள் நிறைந்தமெய் ஸோதி - என்னை
ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஸோதி சிவசிவ
பாடல் எண் :5282
தன்னிகர் இல்லான்என்று ஊதூது சங்கே
தலைவன் அவனேஎன்று ஊதூது சங்கே
பொன்னியல் வண்ணன்என்று ஊதூது சங்கே
பொதுநடம் செய்வான்என்று ஊதூது சங்கே