தன்னொளியில் உலகமெலாந் தாங்குகின்ற விமலை தற்பரைஅம் பரைமாசி தம்பரைசிற் சத்தி சின்னவய தினில்என்னை ஆளநினக் கிசைத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப மன்னியபொன் மணிப்பொதுவில் இன்பநடம் புரிந்து வயங்குகின்ற துரையேநின் மாகருணைத் திறத்தை உன்னிஉவந் துணர்ந்துருகிப் பாடுகின்றேன் எங்கள் உடையானே நின்னருளின் அடையாளம் இதுவே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- பக்தி மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்