தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்
தன்மைகாண் பரிய தலைவனே எல்லாம் தரவல்ல சம்புவே சமயப் புன்மைநீத் தகமும் புறமும்ஒத் தமைந்த புண்ணியர் நண்ணிய புகலே வன்மைசேர் மனத்தை நன்மைசேர் மனமா வயங்குவித் தமர்ந்தமெய் வாழ்வே பொன்மைசார் கனகப் பொதுவொடு ஞானப் பொதுநடம் புரிகின்ற பொருளே