தம்மடியார் வருந்திலது சகியாதக் கணத்தே சார்ந்துவருத் தங்களெலாந் தயவினொடு தவிர்த்தே எம்மடியார் என்றுகொளும் இணையடிகள் வருந்த இரவினிடை நடந்தெளியேன் இருக்கும்இடத் தடைந்து கம்மடியா()க் கதவுபெருங் காப்பவிழப் புரிந்து கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்து நம்மடியான் என்றெனையுந் திருவுளத்தே அடைத்தாய் நடம்புரியும் நாயகநின் நற்கருணை வியப்பே கம்மடியர் - தொவே - அடிகளார் எழுத்து இவ் விரு வகையாகக் கொள்ளக் கிடக்கிறது பொருத்தமான பொருள் தருவதைக் கொள்க ஆபா