தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் தனிநெறி உலகெலாம் தழைப்பக் கருணையும் சிவமே பொருள்எனக் கருதும் கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப் பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப் புண்ணியம் பொற்புற வயங்க அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே அருட்பெருஞ் சோதிஎன் அரசே