தரும விடையார் சங்கரனார் தகைசேர் ஒற்றித் தனிநகரார் ஒருமை அளிப்பார் தியாகர்எனை உடையார் இன்று வருவாரோ மருவ நாளை வருவாரோ வாரா தென்னை மறப்பாரோ கருமம் அறிந்த குறமடவாய் கணித்தோர் குறிதான் கண்டுரையே