தருவார் தருவார் செல்வமுதல் தருவார் ஒற்றித் தலம்அமர்வார் மருவார் தமது மனமருவார் மருவார் கொன்றை மலர்புனைவார் திருவார் புயனும் மலரோனும் தேடும் தியாகப் பெருமானார் வருவார் வருவார் எனநின்று வழிபார்த் திருந்தேன் வந்திலரே