தாகமுள் எடுத்த போதெதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ மோகம்வந் தடுத்த போதுகைப் பிடித்த முகநகைக் கணவனே என்கோ போகமுள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்தஓர் பூவையே என்கோ ஆகமுட் புகுந்தென் உயிரினுட் கலந்த அம்பலத் தாடிநின் றனையே