தாயனே எனது தாதையே ஒருமைத் தலைவனே தலைவனே என்கோ பேயனேன் பிழையைப் பொறுத்தருள் புரிந்த பெருந்தகைப் பெரும்பதி என்கோ சேயனேன் பெற்ற சிவபதம் என்கோ சித்தெலாம் வல்லசித் தென்கோ தூயனே எனது நேயனே என்கோ சோதியுட் சோதிநின் றனையே