தாயி லார்என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம்திருச் சந்நிதி அடைந்தேன் வாயி லார்என இருக்கின்றீர் அல்லால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் கோயி லாகஎன் நெஞ்சகத் தமர்ந்த குணத்தி னீர்என்தன் குறைஅறி யீரோ ஒறி லாதுநல் தொண்டருக் கருள்வான் ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே திருச்சிற்றம்பலம் திருவருள் வேட்கை திருவொற்றியூர் கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம்
தாயி னும்பெருந் தயவுடை யவன்நந் தலைவன் என்றுநான் தருக்கொடும் திரிந்தேன் நாயி னும்கடை யேன்படும் இடரை நாளும் கண்டனை நல்அருள் செய்யாய் ஆயி னும்திரு முகங்கண்டு மகிழும் அன்பர் தம்பணி ஆற்றிமற் றுடலம் தேயி னும்மிக நன்றெனக் கருள்உன் சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே