தாயும் தந்தையும் சற்குரு நாதனும் ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன் பாயும் மால்விடை ஏறும் பரமனே நீயும் கைவிட என்னை நினைத்தியோ வேறு
தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும் ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும் அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன் ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல் என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன் சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய் தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்