பாடல் எண் :1464
தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
சேயேன் படுந்துயர் நீக்கஎன் னேஉளம் செய்திலையே
நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே
பாடல் எண் :3603
தாயே எனைத்தான் தந்தவனே
தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெருங்குற்றம்
பொறுத்தாட் கொண்ட பெரியோனே
நீயே இந்நாள் முகமறியார்
நிலையில் இருந்தால் நீடுலகில்
நாயே அனையேன் எவர்துணைஎன்
றெங்கே புகுவேன் நவிலாயே
பாடல் எண் :4980
தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தை யே
தனியே நின்னை நினைக்கக் கிளர்வ தெனது சிந்தை யே
நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக் கொடுத்த பண்ப னே
நான்செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்ப னே எனக்கும் உனக்கும்