திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும் திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப் பொங்கிஅகம் புறங்காணா தெங்கு நிறைந்திடுமோ அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய் அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே