திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத் தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும் பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே
திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித் தேடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் தேடித் தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக் குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய் குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே