திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன் இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ
திருவார் கமலத் தடம்பணைசூழ் செல்வப் பெருஞ்சீ ரொற்றியில்வாழ் மருவார் கொன்றைச் சடைமுடிகொள் வள்ள லிவர்க்குப் பலிகொடுநா னொருவா தடைந்தே னினிநமக்கிங் குதவ வருந்தோ றுன்முலைமே லிருவா ரிடுநீ யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ