பாடல் எண் :2500
திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே
திருச்சிற்றம்பலம்
------------------------------
--------------------------------------------------------------------------------
திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்
நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்()
பாடல் எண் :3268
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே
ஆம் பாடலின் உத்தரவடிவம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்