தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம் காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும் வாட்டும்இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே ஆட்டும் - படிவேறுபாடு ஆ பா திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- இனித்த வாழ்வருள் எனல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான் நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே