துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மைஒன் றில்லா எச்சிலை அனையேன் பாவியேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம்பசு பதியே அச்சிலை விரும்பும் அவருளத் தமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே