Vallalar.Net
Vallalar.Net

துஞ்சாத

பாடல் எண் :4959
துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் 

சூழலில் உண்டது சொல்லள வன்றே 
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன் 

இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் 
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே 

வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே 
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து 

அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து  ஆடேடி