துடியேறும் இடைஉனக்கு வந்தஇறு மாப்பென் சொல்என்றாய் அரிபிரமர் சுரர்முனிவர் முதலோர் பொடிஏறு வடிவுடையார் என்கணவர் சபையின் பொற்படிக்கீழ் நிற்பதுபெற் றப்பரிசு நினைந்தே இடிஏறு போன்றிறுமாந் திருக்கின்றா ரடிநான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டுதிருச் சபையின் படிஏறித் தலைவர்திரு அடிஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசுரைப்ப தென்னே