பாடல் எண் :341
துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன்
துயர்செய் மாதர்கள் சூழலுன் தினமும்
பட்ட வஞ்சனேன் என்செய உதித்தேன்
பாவியேன் எந்தப் பரிசுகொண் டடைவேன்
நட்டம் ஆடிய நாயகன் அளித்த
நல்ல மாணிக்க நாயக மணியே
மட்ட றாப்பொழில் சூழ்திருத் தணிகை
வள்ள லேமயில் வாகனத் தேவே
பாடல் எண் :852
துட்ட வஞ்சக நெஞ்சக மேஒன்று சொல்லக் கேள்கடல் சூழ்உல கத்திலே
இட்டம் என்கொல் இறையள வேனும்ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால்
நட்ட மிக்குறல் கண்டுகண் டேங்கினை நாணு கின்றிலை நாய்க்குங் கடையைநீ
பட்ட வன்மைகள் எண்ணில் எனக்குடல் பதைக்கும் உள்ளம் பகீல்என ஏங்குமே
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :1321
துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன்
சொல்வ தென்னைஎன் தொல்வினை வசத்தால்
இட்ட நல்வழி அல்வழி எனவே
எண்ணும் இவ்வழி இரண்டிடை எனைநீ
விட்ட தெவ்வழி அவ்வழி அகன்றே
வேறும் ஓர்வழி மேவிடப் படுமோ
சிட்டர் உள்ளுறும் சிவபெரு மான்நின்
சித்தம் அன்றியான் செய்வதொன் றிலையே