துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப் பதிசெயும் சித்திகள் பற்பல வாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம் விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும் மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ் அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து ஆடேடி பந்து ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து கலிவிருத்தம்