துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண் விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன் நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே
துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள் விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார் விழித்திருந் திடவும்நோ வாமே மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க மன்றிலே வயங்கிய தலைமைப் பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே