துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச் சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன் தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன் சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன் திருக்கெ லாம்பெறு வெருக்கெனப் புகுவேன் தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான் உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன் உடைய வாஎனை உவந்துகொண் டருளே வெருக்கு - பூனை ககரமெய் விரிக்கும் வழி விரித்தல் முதற்பதிப்பு