துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் தோன்றா லிங்கு நீர்வந்த கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் கடாதற் குன்பா லெம்முடைமைத் தருமம் பெறக்கண் டாமென்றார் தருவ லிருந்தா லென்றேனில் லிருமந் தரமோ வென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ