துருவுபர சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம சொப்பனங்கண் டேன்பரம சுழுத்தியுங்கண் டுணர்ந்தேன் குருபிரம சாக்கிரத்தைக் கண்டேன்பின் பிரமம் குலவியசொப் பனங்கண்டேன் சிவசுழுத்தி கண்டேன் குருதுரியம் காண்கின்றேன் சமரசசன் மார்க்கம் கூடினேன் பொதுவில்அருட் கூத்தாடும் கணவர் மருவிடப்பெற் றவர்வடிவம் நான்ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர்அற்ற வாழ்க்கையில்என் தோழி