துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்ற லேஉமைத் துணைஎன நம்பி வளிக்குள் பஞ்சனை யேன்அடைந் தேற்றால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் அளிக்கும் தன்மையீர் வாழ்ந்திவண் இருக்க அடிய னேன்அலை கின்றதும் அழகோ ஒளிக்கும் தன்மைதான் உமக்கும்உண் டேயோ ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே