தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும் ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே
தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனைவிட் டேக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் ஆக்கமும் அருளும் அறிவும்மெய் அன்பும் அழிவுறா உடம்பும்மெய் இன்ப ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மைஇவ் வாசகம் உணர்மின் கலிப்பா