தேவரே அயனே திருநெடு மாலே சித்தரே முனிவரே முதலா யாவரே எனினும் ஐயநின் தன்மை அறிந்திலர் யான்உனை அறிதல் தாவில்வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மையன் றோபெருந் தவத்தோர் ஒவில்மா தவம்செய் தோங்குசீர் ஒற்றி யூர்அமர்ந் தருள்செயும் ஒன்றே