தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும் அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில் விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே