தோய்ந்தானை என்னுளத்தே என்பால் அன்பால் சூழ்ந்தானை யான்தொடுத்த சொற்பூ மாலை வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த் தானை வேதாந்த முடிமுடிமேல் விளங்கி னானை வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பா னானை மணிமன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் ஈய்ந்தானை() ஆய்ந்தவர்தம் இதயத் தானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே () ஈந்தானை - முதற் பதிப்பு, பொ சு, பி இரா, ச மு க